Unani Medicine

யுனானி மருத்துவம்

கிமு  460ல் கிரேக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த யுனானி மருத்துவம் ,மருத்துவ உலகின் தந்தை என இன்றளவும் போற்றப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போக்ரடிஸ் செய்ததும் யுனானி மருத்துவம் தான் .

யுனான் என்றால் கிரேக்கத்தவன் அல்லது கிரேக்கத்தை சேர்ந்தவன் என பொருள் – தமிழில் கூட கிரேக்கர்கள் “யவனர்கள்” என அழைக்கும் பழக்கம் உண்டு ,அழகிய தோற்றம் உடைய ஆண் பெண்ணை ,யுவன் -யுவதி என்பார்கள்.

கிரேக்க மூலிகை மருத்துவமே யுனானி மருத்துவம் ஆகும் – இதன் முக்கிய குறிகோள் வரும் முன் காத்தல் ஆகும் ,முதலில் கிரேக்கர்கள் அழகிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் அவர்களின் அரசர்குல மக்களுக்கு அழகை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வைத்திய முறையே யுனானி பிறகு நூற்றாண்டுகள் கழித்து இந்த முறை அரபுலகில் அடியெடுத்து வைத்தது

பொதுவாக அரேபியர்கள் உடல் வளர்ச்சிக்கும் பூரண ஆரோக்கியத்திற்கும் முதலிடம் கொடுப்பவர்கள் ஆகவே அழகோடு ஆரோக்கியம் தரும் மூலிகைகள் இதனுடன் இணைக்கப்பட்டது குறிப்பாக அலிசேனா என்னும் அராபிய முஸ்லிம் மருத்துவரால் இந்த வைத்திய முறை மேலும் மெருகூட்டப்பட்டது .

Unani

யுனானி மருத்துவம் பற்றிய முதல் நூல் இலத்தீன் மொழியில் இயற்றப்பட்டது ,இலத்தீன் இன்று நம்மூடே பேசப்படுவதில்லை எனினும் அந்த தாய் நூல் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது,பிறகு அதனைத் தழுவிய ஏராளமான நூல்கள் அரபியில் எழுதப்பட்டது.

முகலாயர் காலத்தில் அவர்கள் வழியாக  இந்தியாவினுள் நுழைந்த யுனானி மருத்துவம் ,பிரெஞ்சு ,பர்சியன்,அரபி,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் கலவையாக இந்திய மொழியாக முகலாயர்களால் உருவாக்கப்பட்ட உருது மொழியிலும் பின்னர் மருத்துவ குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. யுனானி மருத்துவம் என்பது நமது தெற்கத்திய பாட்டி வைத்தியமும் ,உணவே மருந்து என்ற சித்தர் வைத்தியமும் ,அதிசயிக்கத்தக்க ரீதியிலான ஆயுர்வேத மூலிகை மருத்துவமுமே ஆகும்.

காய்கறிகள், பழங்கள்,கீரைகள் ,பருப்புவகை ,விதைகள்,தானியங்கள், கிழங்குகள் மற்ற நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகு ,சீரகம் பூண்டு ,சிறிய வெங்காயம் ,வெந்தயம், மஞ்சள் , ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் எனப்படும் மளிகை வஸ்த்துக்கள் தான்  அதன் மருந்துகளாகும் அதுபோக கல்லுப்பு,வெந்நீர், இது இரண்டும் பிரதான சேர்மானம் .

பொதுவாக இயற்கை வழி வாழ்க்கையை மட்டுமே முன்னிருத்தி வாழச்சொல்லும் இந்த மருத்துவ முறையில் உடலசைத்து வேலை செய்தாலே இரத்த ஓட்டம் சீர்படும் ,இரத்த ஓட்டம் சீராகுமாயின் உடலில் கழிவு சேராது ,கழிவு சேராத உடல் நோயில்லா ஒரு பொக்கிஷம் என யுனானி மருத்துவ குறிப்புகள் திரும்பத்திரும்ப எடுத்துக்கூறுகிறது.

                -Ummu Aadil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *