சமாரிடன்கள்

சமாரிடன்கள் | ஷாமாரியோம்கள் | சாமிரியர்கள்

சமாரிடன்கள் – எபிரேய அராமிய மொழிகளில் ஷாமாரியோம்கள் அரபியில் சாமிரியர்கள் இவர்கள் யூதர்களில் மிக மூத்த பிரிவர்கள். இவர்களின் தற்போதைய எண்ணிக்கை வெறும் 800 மாத்திரமே..!

தற்காலத்தில் வாழும் பாரம்பரிய ஆர்தடாக்ஸ் யூதர்களை இவர்கள் யூதர்களாகவே ஏற்பதில்லை. தால்முத்தையும் புனித நூலாக ஏற்பதில்லை. ஆர்தடாக்ஸ் யூதர்களையே ஏற்பதில்லை என்றாகிவிட்ட போது நவீன தோரா வகையறாக்களை இவர்கள் மனிதர்களாக ஏற்கவில்லை.
சரி இவர்கள் வரலாறு தான் என்ன ?

orthodox jews

சமாரிடன் யூதர்கள் தங்களை தூதர் இப்ரயிம் ( இபுராஹிம் ) மற்றும் அவரது சகோதரர் மஸனோவா ஆகியோரது வழித்தோன்றல்களாக கூறுகின்றனர். இப்ரயிம் – மஸனோவா இருவரும் தூதர் யூசேப்பின் புதல்வர்களாம். மற்ற யூதர்கள் போல தங்களது தூதராக தாவீதை ஏற்பதில்லை. இவர்களுக்கான புனித நூலாக சமாரிய தோராவை வைத்துள்ளனர். அந்த சமாரிய தோராவை தங்களது இனத்தவர் தவிர மற்றையோர் படிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. காரணம் தோரா போல பைபிள் போல மனிதக்கரம் விளையாடிவிடக்கூடாது என்கிற அச்சத்தில் தான். சமாரிய தோரா என்பது வேறொன்றுமில்லை இப்ரயிமின் சபூர் தான் என்று கூறி வாதத்தை முடித்துவிடுகின்றனர். அவர்கள் ஹீப்ரூ , அரமேயக் மொழிகளில் தங்களது புனித நூல் பாதுகாக்கப்படுகிறதாகவும் ஆனால் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த விளக்கவுரையன்றி தங்களிடம் வேறு விளக்கமில்லை எனவும் கூறும் இவர்கள் பேசும் மொழி அரபு.

அதிர்ச்சியாக உள்ளதல்லவா…? யூதர்களின் எபிரேயத்தை விட்டு அரபை ஏன் பேச வேண்டும் என்கிறீர்களா..? சமாரியர்கள் யூதர்களை வெறுக்குமளவிற்கு எபிரேயத்தையும் வெறுக்கின்றனர். இவர்களது இருப்பிடமும் யூதர்களின் தொடர்பற்ற இடத்தில் தான் உள்ளது. பலஸ்தீனிய ஜோர்டான் பகுதிகளுக்கு இடையில் ஸெச்சாம் ஸின்ச்சர் ஆகிய பள்ளத்தாக்குகளில் சிறு குடியிருப்புகள் வைத்து வாழ்கிறார்கள்.

இத்தனை நாட்களாக இவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியுலகிற்கு வரவில்லை என்றாலும் அவ்வப்போது அவர்கள் வாழும் பகுதியில் உள்ள சிறு மலை ஒன்று உள்ளது. மவுண்ட் கெரிஸிம் எனப்படும் அந்த குன்றில் பழமையான யூதர்களது கோவில் இருந்ததாகவும் அங்கு வந்து வருடத்திற்கு ஒருமுறை தங்களது வழிபாட்டை நிறைவேற்றுவதாகவும் கூறுகின்றனர். அப்படி அவர்கள் கொண்டாடும் பண்டிகையை வேடிக்கை பார்க்க பலஸ்தீனியர்களும் ஜோர்டானியர்களும் அங்கு குழுமுவார்களாம். அவர்களுடைய கொண்டாட்டத்தில் பெண்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் ஆகவே மாற்று இனத்தவருக்கு தாரளமாக அனுமதியளிக்கின்றனர். அவ்வாறு இவர்களை காணச்சென்றவர்கள் கொடுத்த குறிப்பு தான் தற்போது இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது

அது என்ன பண்டிகை ?

அவர்களது தூதர் இப்ரயிம் கடவுளின் வார்த்தையை ஏற்று பெற்ற மகனையே பலி கொடுக்க துணிந்த அந்த தியாகத்தை மதிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் யூத மாதமான நிஸான் மாதத்தில் 14ம் நாள் ஆடுகளை பலியிட்டு தங்களது நன்றியை செலுத்துகின்றனர். இதற்கு சமாரிட்டன் பாஸோவர் என பெயர் வைத்திருக்கிறார்கள். ஆடூகளை கூட்டி வந்து இறைவனுக்கு பலியிட்டு பின் அதனை சமைத்து உண்கிறார்கள். வீடுகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இது இஸ்லாத்தின் பக்ரீத் பண்டிகையை நினைவுபடுத்துகிறதே..?

ஆம், இவர்களுடைய உடை, வணக்கமுறை ,பண்டிகை என அனைத்தும் இஸ்லாத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. பைத்துல் முகத்தஸின் வெய்லிங் சுவற்றில் போய் முட்டிக்கொண்டு அழும் யூதர்களின் வழிபாட்டை இவர்கள் போலியானது என்கிறார்கள். முஸ்லிம்கள் போல இமாம் முன்னின்று தொழுகை நடத்த அதனை பின்பற்றி்தொழும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். வணக்க முறையில் முஸ்லிம்களை போல இருப்பதுமட்டுமின்றி யூத ரப்பிகள் உடத்தும் கருப்பு அங்கிகளை உடுத்தாமல் அரபிகள் போல வெள்ளை அங்கிகளையே உடுத்துகின்றனர். தலைக்கு சிவப்பு நிற துருக்கி தொப்பி வைக்கின்றனர் . இளையவர்களாக இருந்தால் வெள்ளை தொப்பி அணிகின்றனர். இவர்களது வெள்ளை அங்கியும் சிவப்பு தொப்பியும் நமக்கு சூபிய தர்வேஷ்களை ஞாபகப்படுத்துகின்றது அல்லவா..? ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு துளியளவு கூட தொடர்பில்லை.

இவர்கள் இன்றைய யூதர்களை விஷமாக வெறுக்க காரணம் ?

கெரிஸிம் மலையில் பிரம்மாண்டமாக இருந்த தங்களது பழமையான புனித கோவிலை இடித்தவர்கள் இந்த நவீன யூதர்கள். மோசே காலத்து யூத வெளியேற்றத்திற்கு பிறகு பாரசீகத்தில்
(இன்றைய இராக்) தங்கியிருந்துவிட்டு மீண்டும் வாக்களிக்கப்பட்ட புனித பூமிக்கு திரும்பிய யூதர்கள் கரைபடிந்தவர்கள்.அவர்களது புனித நூலின் புனித்ததை கெடுத்துக்கொண்டவர்கள், மதத்தில் இல்லாதவற்றை புகுத்திக்கொண்டவர்கள், பன்றியை உணவாக ஏற்றுக்கொண்டவர்கள் என சரமாரியாக குற்றம் சுமத்துகிறார்கள் இறுதியாக மனித இனத்திற்கே கேடு இந்த யூத ரப்பிகள் என சாபமிடுகிறார்கள்.

வாக்களிக்கப்பட்ட புனித பூமியாக தற்போதைய இஸ்ரேலை அநியாயமாக அபகரித்து வைத்துள்ளார்கள். புனித பூமி என்பது நாங்கள் வாழும் இந்த ஸான்செம்- ஸான்செர் பகுதி தானே தவிர தற்போது இவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பலஸ்தீனமல்ல என்பதே இவர்களது ஆதங்கமாக உள்ளது. எங்களிடமிருந்து தப்பிச்சென்று இராகில் புதிய சமாரியாவை நிர்மாணிக்க நினைத்து அங்கும் தோற்று நாசமாகி திரும்பி வந்த லெவிக்டஸ் யூதர்கள் எங்களால் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவே மாட்டார்கள் என அடித்து கூறும் இவர்களின் ஜனத்தொகை அழிவை இறைவனிடம் விட்டுவிட்டோம் என்கிறார்கள் நம்பிக்கையுடன்

பண்டிகை நாளில் அதிகாலையிலேயே கெரிஸிம் மலைக்கு சென்று சூரிய உதயத்திற்காக காத்திருக்கின்றனர் பின் கிழக்கு திசையை நோக்கி இமாமிற்கு பின்பாக நின்று தொழுகின்றனர். அதன் பிறகு கொண்டுவந்த பலியாடுகளை பலியிட்டு அதற்காக உண்டாக்கி வைக்கப்பட்ட தனலில் சமைத்து உண்கிறார்கள். சூரிய அஸ்த்தமனம் வரை காத்திருந்து பின் வீடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களின் பெண்கள் பலியிடும் நாளில் அழைத்துவரப்படுவதில்லை அவர்களுக்கான ஒரு நாளில் சிதிலமடைந்த புராதன கோவிலில் வழிபட அனுமதிக்கிறார்கள்.

மேற்கில் இருப்பவர்களுக்கு கிழக்கு திசை தான் கிப்லாவாக வருகிறது. அதாவது நம் முஸ்லிம்கள் மேற்கை நோக்கி தொழுவது போல . ஆனால் ஆர்தடாக்ஸ் யூதர்களோ பைத்துல் அக்சா எனும் தங்க கோபுரம் இருக்கும் திசையை நோக்கி தொழுவார்கள்.

சமாரிடன்களை பற்றிய குறிப்பில் சில முரண்பாடுகள் இருப்பது உண்மையே. ஆனால் அவர்களுடைய வேதமென அவர்களிடம் உள்ள சமாரிய தோரா நமது பார்வைக்கு கிடைக்காத வரை அவற்றை நாம் குறைகூறவும் முடியாது.
அவர்களின் குறிப்பில் நாம் காணும் குறைகள் :
* நபி இப்ரயிம் என அவர்கள் ஏற்றுக்கொண்ட நபி இஸ்லாமியர்கள் கூறும் நபி இபுராஹிம் தானா?
* அப்படியென்றால் அவருடைய தகப்பனாரின் பெயர் யோசேப் என்பது எப்படி சாத்தியம் ?
* நபி யோசேப்பு ஒரு தூதரானவர் எனில் இஸ்லாமியர்களது நம்பிக்கைப்படி அவரது தந்தை இறைமறுப்பு கொள்கையுடையவர் ஆயிற்றே?
* நபி சுலைமானுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சபூர் வேதத்தை நபி இப்ரயிமுடையது என ஏன் கூறுகிறார்கள். ?
* நபி இப்ரயிமின் தம்பி மசனோவா என்றால் இஸ்லாமியர்களின் குறிப்பில் அவர் பற்றிய குறிப்பு இல்லாதது ஏன் ?
* இஸ்லாமியர்களது நம்பிக்கை பிரகாரமே நபி இப்ரயிமின் மகன் இஷ்மயேலை பலிகொடுக்க இருந்ததாக வருவது குழப்பமளிக்கிறதே ?
* கி.மு.436 ம் ஆண்டு தங்களது புனித கோவில் இடிக்கப்பட்டதாக கூறும் இவர்கள் நபி சாலமோன் கட்டிய கோவிலுக்கு முக்கியத்துவம் தராத்தும் கால அளவு வேறுபாடூகளும் முரண்படுகிறது.
* நபி மோசேயின் காலத்தில் வெளியேறிய யூதர்களின் வெளியேற்றம் அதாவது The Exodus எனப்படும் நிகழ்வு நடந்து ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு மேலாகியிருக்கும் நிலையில் அதலிருந்து பாரசீகம் சென்று  மீண்டு வந்த யூதர்கள் மாறிவிட்டார்கள் என கூறுவது கால முரண்பாடாக உள்ளது..?
* குர்ஆனில் எந்த நபிக்கு பின் எந்த நபி வந்தார் எத்தனை ஆண்டுகால இடைவெளியில் வந்தார் என்கிற தெளிவுகள் இல்லாதபட்சத்தில் சமாரிடன்களின் வரலாற்றை நம்மால் குறை கூற இயலாது .. சமாரிடன் என்றால் keepers எனும் பொருள்படும்படியான பாதுகாவலர்கள் என்று அர்த்தம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாப்பது ஆப்ராமிய மதத்தின் கொள்கைகளையா அல்லது இவர்களுடைய வேதத்தின் உண்மைகளையா என புரியாத புதிராகவே உள்ளது.

-Ummu Aadil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *