Yoga and Prayer

YOGA | தொழுகையும் யோகாசனமும் 

Toe squat எனப்படும் கால்களின் விரல்களை எம்பிக்கொண்டு அமரும் நிலையை யோக கலையில் பாத-உத்தாசனம் என்கிறோம். இது வேறு ஒன்றுமல்ல முஸ்லிம்கள் தொழுகையின்போது “தஷஹ்ஹுத்” செய்ய அமரும் நிலை ஆகும். இருகால்களையும் மடித்து மண்டியிட்டதுபோல அமர்ந்து பாதங்களை பின்னோக்கியும் விரல்களை முன்னோக்கியும் வைத்து அமருதல். சஜ்தா நிலை என்பது இதேபோல இருகால்களையும் மடித்து மண்டியிட்டதுபோல் அமர்ந்து பாதங்களை பின்னோக்கியும் விரல்களை முன்னோக்கியும் வைத்து தரையில் கைகளை ஊன்றி , நிலத்தில் நெற்றியும் மூக்கையும் படுமாறு வணங்குவது. மீண்டும் அத்திஹியாத் நிலையில் மண்டியிட்டு அமர்ந்து வலதுகால் பாதத்தை பெருவிரலால் குத்தவைத்து தலைகிழ் நேராக வைத்து இடது கால் பாதத்தை ஆசனப்பகுதியில் வைத்து அமர்வது.  இந்த முறை தான்…ஒட்டுமொத்த உடலுக்குமான நோய் நிவாரணம் என தற்போதைய ஆங்கில மருத்துவம் கூறுகிறது.

YOGA

சிறுவயது குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்பொழுது கால்களை தரையில் நன்கு ஊன்றாமல், கால்களின் பெருவிரல்களில் தங்களது முழு உடல் எடையை தூக்கி, மற்ற எட்டு விரல்களையும் துணையாக வைத்து எம்பி எம்பி நடப்பார்கள். அதற்கு toe walking என்று பெயர்.
நம் பெற்றோர்களில் பலர் குழந்தை செய்யும் இந்த விளையாட்டு நடையை ஊக்குவிப்பதில்லை காரணம் குழந்தைகள் நிலைதடுமாறி கீழே விழக்கூடும் என்பதால் ஆகும், ஆனால் இதனை மேற்கொள்ளும் குழந்தைகளின் மூளை பலம் பெறுகிறது என்றும் நடப்பதற்கான பேலன்ஸ் கிடைக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

TIC -TAC -TOE (taping dance )

மேற்கத்திய  tic-tac-toe (taping dance ) நடனமாகட்டும், ஸ்பெயினின்   ஃபிளமங்கோ , ரஷ்ய பேலேட் நடனமாகட்டும் அதேபோல சீன பாரம்பரிய நடனமான ஷென்யுன் நடனமாகட்டும் இவை அனைத்திற்கும் இருக்கும் ஒரு ஓற்றுமை யாதெனில் நடன அசைவுகளில் முழுக்க கால்களின் குதிகளை தூக்கியபடி விரல்களை கொண்டே நகருவார்கள். சீனாவில் ஒருபடி மேலே போய் புராதன காலந்தொட்டு கால்களின் பாதங்களை கூம்பாக மடித்து இறுக்கமாக கட்டி வைத்து விடுவார்கள். இதற்கு ஃபுட் பைன்டிங் என்று பெயர். வயதிற்கு வந்த நாள் முதலாக பெண்களுக்கு அவர்களது கால்களை இறுக்கி கட்டி…கால்களின் பெருவிரலால் மட்டுமே நடக்கும்படியாக கால்களை சுருக்கிவிடுவார்கள். பிறகு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவ காலணிகளுக்குள் தங்களது கால்களை சொறுகி வைத்து நடப்பார்கள்.

சீனர்கள் குறிப்பாக இதனை ஒரு வாழும்கலை சடங்காகவே செய்துவந்தார்கள். இதற்கு காரணம் பெருவிரலால் நடப்பது தங்களது உடல் உயரத்தை கூட்டும் என அவர்கள் நம்பினார்கள். திருமணமாகும் பெண்களுக்கு இடுப்பெலும்பு உறுதிப்படும் என்றும் குழந்தைகளை சுமப்பதற்காக முதுகெலும்பு வலுப்பெறும் என்றும் நம்பினார்கள்.  அது உண்மையும் கூட. இன்றும் நமது கிராமங்களில் வயதிற்கு தகுந்த உடல் உயரம் இல்லாதவர்களையும்…உடல் பருமன் அதிகமிருப்பவர்களையும் குதிங்கால்களை உயர்த்திக்கொண்டு தினமும் சிறிது நேரம் குதிக்கவும், நடக்கவும் கூறுவார்கள். அவ்வாறு பெருவிரல்களோடு மற்ற விரல்களையும் முன்னோக்கி மடித்து நடப்பதால் உடலின் எடை பேலன்ஸ் செய்யப்படுவதோடு கால்களுக்கு தனியான உரமும் தெம்பும் கிடைக்கிறது.

ஆங்கில வழி மருத்துவத்தின் ஒரு கிளையான ஃபுட் ரிஃப்லக்ஸாலஜியில் toe squatting எனும் தஷஹ்ஹுத்- சஜ்தா   நிலையை  அதிகம் வலியுறுத்தி கூறுகின்றனர். இந்த நிலையில் அமர்வது மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு  ஞாபகசக்தியை நிலைநிறுத்தி வைக்கவும் உதவுகிறதாம். கால்களுக்கு வலிமை சேர்க்கவும், தொடை மற்றும் குதிரை முட்டு எலும்புகளுக்கு உறுதியளிக்கவும் , கண்பார்வை சீராக இருக்கவும் , செவித்திறன் மேம்பாடு அடையவும் இந்த நிலை உதவுகிறதாம்.

Yoga

முஸ்லிம்கள் தொழும் நிலையான தக்பீர்-கய்யீம்-ருக்உ-தஷஹ்ஹுத்-சுஜூது இவை ஐந்து நிலைகளும் யோக்ககலையின் உத்தாஸனா-பாதஹஸ்த்தாசனா- வஜ்ராசனா-பாத உத்தாஸனா ஆகிய நிலைகளுக்கு சமமானது என்று கூறும் reflexologists ,பாதத்தில் உள்ள எந்தெந்த புள்ளிகள் என்னென்ன உள்ளுருப்புகளுக்கு நன்மை பயக்கிறது என அட்டவணை ஒன்றும் வெளியிட்டுள்ளனர். அதில் இரு கால்களின் பெருவிரல்களில் தான் மொத்த தலை மற்றும் தலை சார்ந்த உறுப்புகளுக்கான நோய் நிவாரணி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.பிட்யூட்டரி சுரப்பி,பினியல் சுரப்பி, மூளையின் செரிபிரம் மற்றும் செரிபல்லம் ஆகிய பகுதிகளின் செயல்பாட்டினை தூண்டி உடலுக்கு தேவையான நோய் நிவாரணிகளை தானாகவே தூண்டுதல் அடையச்செய்கின்றன.

முஸ்லிம்கள் தொழுகையின்போது அவர்களது மனம் ஒருமுகப்படுவது என கூறுவதை நிரூபிக்கம் வகையிலான இந்த தகவல்களை அறிந்த எந்த முஸ்லிமும் நிச்சயமாக தொழுகையை பேணுவார் என்பது உறுதி.

-Ummu Aadil, Chennai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *