ஏலியன்கள் -2

Alians and muslims | Aliens and Extraterrestrials | Part -2

ஏலியன்ஸ் என்பதன் பொருள் “அந்நியன்” ஆகும். அவன் வேற்று நாட்டின் மனிதன், மனிதன் மட்டுமல்லாது எந்தவொரு ஜீவராசியும், பொருளும் கூட பூமியை சேராத ஒன்றாக இருப்பின் நமக்கு  அது ஏலியன் தான். சிலர் ஆங்கில வார்த்தையான stranger எனும் சொல்லை அந்நியன் எனும் அர்த்தத்திற்கு பயன்படுத்துவார்கள்… Stranger என்பதற்கு பொருள் “புதியவன்” இந்த நாட்டுக்காரன் தான் ஆனால் இவ்விடத்திற்கு புதியவன் அல்லது அறியப்படாதவன். ஏலியன் என்கிற வார்த்தை

ஏலியன் என்கிற சொல் முதலில் யாரால் கையாளப்பட்டது? 1902ல் மேரி ரைட் எனும் அமெரிக்க பெண் நாவலாசிரியர் ஒருவரால் ஏலியன்ஸ் என்கிற பெயரில் ஒரு புத்தகம் எழுதப்பட்டது. அது அமெரிக்க தென்புலத்தில் வாழ்ந்த ஒரு கருப்பின குடும்பத்து மக்களின் சோக கதையாகும். அவர்கள் சொந்த நாட்டிலேயே அனுபவித்த இனவெறி கொடுமைகளை பற்றி விளக்குவது ஆகும். ஆனால் ஏலியன்ஸ் எனும் சொல் எலியான் எனும் பண்டைய ஹீப்ரு சொல்லில் இருந்து வந்தது.

எனது முந்தைய #யூதர்தேசம் பதிவில் கூட அல்லாஹ் எனும் ஓரிறையை குறிக்கும் சொல் எப்படி பண்டைய அரமைக் மொழியில் இருந்து உருவகம் பெற்று வந்தது என்பதை விளக்கியிருந்தேன். அதில் ஏலி, எலியா, ஏலியா, எலாஹ், அல்லாஹ் என்று ‘A’ வரிசை சொற்களாக பிறழ்வு பெற்று வந்த ஒரு சொல் ஆகும். இன்னும் ஆழமாக சென்று பார்த்தால் ஏலியன் எனும் வார்த்தை ஹெலியோஸ் எனப்படும் கிரேக்க சூரிய கடவுளின் பெயர், (Helios- Helium a substance of the sun and space) , இதில் ஏற்பட்ட திரிபு தான் ஹீப்ரு மற்றும் வெல்ஷ் மொழிகளில் எலியோஸ் ஆகி ஏலியான மாறியுள்ளது.

alians

இன்றும் மேலை நாட்டவர்கள் ஏலியான் என பெயர் வைக்கிறார்கள். தமிழில் கூட சூரியனுக்கு எல், எல்லி,அனலி, என்றூழ், எல்லினான், எல்லியான் என்கிற புராதன பெயர்கள் உண்டு. ஆக எந்த மொழியில் எடுத்தாலும் ஏலியன் எனும் சொல்லுக்கு விண்வெளியை சேர்ந்தவன் என்கிற பொருளே பொருத்தமாக சேர்கிறது.

ஏலியன்ஸ் எப்போது நம்மிடம் தொடர்பில் வந்தார் ?

நாம் இப்போது கற்பனை கதைகளில், அறிவியல் புனைவுகளில் காணும், கேட்கும், படிக்கும் அனைத்தும் பண்டைய காலந்தொட்டே மனிதர்களால் பழக்கத்தில் கொண்டுவரப்பட்டவைகள் தான். சினிமா துறையில் அதீத கற்பனா சக்தியை ஈர்க்க ஏலியன்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் தேவைப்பட்டதன் விளைவு நாம் இப்போது அவர்களை பற்றி அறிய அதிகம் துடிக்கிறோம். ஏலியன்ஸ் பற்றிய விபரங்களை தேடுவதிலும் கற்பனைகளை கட்டவிழ்பதிலும் மற்றாரை விடவும் அதிகம் விழுந்தடித்து கவனம் செலுத்துவோர் அமெரிக்கர்களும் அவரது நாஸா- ஹாலிவுட் இரண்டும் தான்.

அப்படி நாஸாவின் பிரபல விஞ்ஞானியும் ஏலியன்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்ஸ் பற்றி தேடியவரும் அதுபற்றி குறிப்புகளும் விபரங்களும் அளித்தவர் கார்ல் சாகன் எனும் விண்ணியல் அறிஞரும் , விண்வெளி ஆராய்ச்சியாளரும் ஆவார் . காஸ்மோஸ் எனும் அவருடைய முக்கிய எழுத்துப்பூர்வ படைப்பு உலகம் முழுக்க இருக்கும் விண்வெளி ரசிகர்களை கட்டிப்போட்டது. விண்வெளி சம்பந்தமாகவும் ஏலியன்ஸ் பற்றியும் 800 விதமான கட்டுரைகளும் புத்தகங்களும் இயற்றித்தள்ளியவர்.

அவர் கூறுகிறார், ” பிரபஞ்சம் என்பது நமது கற்பனைக்கு எட்டாத ஒன்று, ஆனால் அதனை ஒரு தனித்துவ சக்தியோ அல்லது குறிப்பிட்ட ஒரு வேற்றுயின விண்வெளிக்கூட்டமோ கட்டுப்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்க இயலாது என கூறி கடவுள் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாஸாவுடன் மேலதிக தொடர்பில் இருந்து வந்த சாகன் SETI எனும் அமைப்பை தொடங்கி அதில் பலநாடுகளை உறுப்பாக இணைத்து விண்வெளிக்கு ஒரு தகவல் பரிமாற்றத்தை அனுப்பினார். Closed encounters of the third kind எனும் ஹாலிவுட் படத்தில் நீங்கள் இதுபற்றிய விபரத்தை கண்டிருக்கலாம். அதாவது வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவதற்காக ஒரு சங்கேத மொழியை தயாரித்து அனுப்புவார்கள். அது அவர்களை சென்றடைந்து அதனை அவர்களது அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மொழிமாற்றம் செய்து புரிந்துகொண்டு அதற்கு பதில் அனுப்புவார்கள். அதன் பின்னர் ஏலியன்ஸிற்கும் மனிதர்களுக்கும் பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்பட்டு அவர்கள் பூமிக்கு இறங்கி வருவார்கள். அவர்கள் கடந்திச்சென்ற மனிதர்களை விடுதலை செய்வது போல படம் அமைந்திருக்கும்.

சாகன் அனுப்பிய சிக்னலுக்கான பதிலாக Wow என்கிற ரிப்ளை கிடைத்ததாக , அப்போது அவர் தெரிவித்தார். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ்ஆல்ட்ரின் நிலவுக்கு போய் வந்த பிறகு அவர்கள் கொடுத்த பேட்டியில் பஸ் ஆல்ட்ரின் தாம் நிலவில் நின்றிருந்தபோது தம்மை ஒரு விண்வெளி ஓடும் அதிவிரைவில் கடந்து சென்றதாக கூறியிருந்தார். அப்போதிலிருந்தே இந்த ஏலியன்ஸை கண்டுபிடிப்பதற்கான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. சாகன் -நாஸா உறவு சற்று தகராறு ஏற்பட்டு சாகன் நாஸாவை விட்டு விலகியிருந்த போது அவரிடம் கேட்கப்பட்டது..? Are you committed with spirituality? சாகன் சொன்னார்.., விண்வெளியில் இருக்கும் தூசுப்படலத்தில் உண்டான அத்தனை பொருளும் மனித உடலில் இருக்கிறது. நாம் அனைவரும் நட்சத்திரக்கூட்டத்தில் இருந்து பிறந்தவர்கள், பிரபஞ்சம் வேறு மனிதன் வேறல்ல..ஆனால் நான் பிரபஞ்சத்தை தாண்டி வாழும் உயிர்களை கண்டுபிடிக்க நினைத்தேன்.. என்னால் இறைவன் என்று ஒருவன் இருக்கப்போவதில்லை என நிரூபிக்கமுடியவில்லை என்றார். அவருக்கு கொடுக்கப்பட்ட 65 வயது ஆயுளுக்குள்ளான நேரப்பகுதியில் அவர் இறைவனது பிரம்மாண்டத்தை கண்டுபிடிக்க முயன்றது குழந்தைத்தனமாகிப்போனது.

இவர் கூறிய கூற்றுகளில் இரண்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது உங்கள் உலகம் தவிர வேறு எங்கும் உங்களால் குடியேற இயலாது அதுபோல இறைவன் இருப்பதை உங்களால் உணர முடியவில்லை எனும்போது அவனது அரிச்சுவட்டை எப்படி காண்பீர்கள் என்பது.

சாகன் மட்டுமல்லாது உலகின் விண்வெளி நிபுணர் என பட்டம் பெற்ற ஸ்டீபன் ஹாகிங்ஸும் கூட அவரது ஆயுள்வரை ஆராய்ச்சி செய்ய முடிந்ததே தவிர அவரால் எதையும் நிரூபிக்க இயலவில்லை.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *