Alians -4

Alians and muslims | Aliens and Extraterrestrials | Part -4

குர்ஆனில் மனிதன் தவிர வேறு இரு படைப்பினங்கள் பிரபஞ்சத்தில் வாழுகின்றன என அடிக்கடி வாகனங்கள் வருகிறது. அந்த இரு படைப்பினங்களும் மனிதப்படைப்பினத்தை, இறைவன் படைப்பதற்கு முன்பாகவே தாம் படைத்துவிட்டதாகவும்…மனிதனுக்கு முன்னிருந்தே அவை வானுலகில் வாழ்கிறது என்றும் அவை தம்மை துதிக்கின்றதி எனவும் கூறுகிறான்.

மனிதனை படைத்த பிறகு அவ்விரு படைப்பையும் அந்த ஆதி மனிதனுக்கு மரியாதை செய்யக்கோரி அதில் மலக்கு எனும் படைப்பு இறைவனின் சொல்லுக்கு மாறுசெய்யாமல் அதை செய்தவிட்டதையும், மற்றுமொரு படைப்பான ஜின் , மனிதனை மதிக்க தவறியதாகவும் குர்ஆன் வசனங்களில் வாயிலாக அறிகிறோம்

எனவே மனிதனை விட அவர்கள் அதிகம் அறிந்தவர்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேல்நாட்டு விண்வெளி ஆய்வாளர்கள் இஸ்லாம் கூறும் ஜின் இனம் தான் நாம் தேடும் ஏலியனாக இருக்க கூடும் என்கிற முடிவுக்கு சற்றேரக்குறைய ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டனர். அறிவியலை படித்து தங்களை மேதை என கூறுவோர் தங்களுடைய ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உலகிலுள்ள மதங்களையும் அதன் வேதநூல்களையும் , மதங்கள் சார்ந்த வழிபாட்டுத்தளங்களிலும் தங்களுக்கான ஆதாரங்களை தேட தவறுவதில்லை. அப்படி தீவிரமாக தேடிய வகையில் குர்ஆனில் அவர்களின் தேடலுக்கான பதில் ஓரளவிற்கு கிடைத்துள்ளது என்பது உண்மையே..காரணம் குர்ஆனில் மூன்று வெவ்வேறு படைப்பினங்களை பற்றிய உருவ அமைப்பு மற்றும் இயல்புகள் அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

குர்ஆன் வசனங்களை வைத்து இறைவன் தனது படைப்பினங்களை நிலத்தில் இருகால்களால் நடப்பவை, நான்கு கால்களால் நடப்பவை, தமது வயிற்றால் நடப்பவை என மூன்றுவித உயிர்வாழ்விகளையும், சிறகு விரித்து பறக்கும் பறவைகளையும் பூமியில் படைத்துள்ளதாகவும் அறிந்துகொள்ள முடிகிறது. இனி இறைவன் குர்ஆனில் கூறப்படும் அந்த மூன்று படைப்பினங்களை எப்படி , எந்த பொருள் கொண்டு படைத்தான் என காணலாம்.

மலக்கு, ஜின், மனிதன்

இறைவனது பெரும் படைப்பில் மூன்று இனம் உள்ளது. முதலில் ஒளியால் (LIGHT) படைக்கப்பட்டவர்கள் மலக்குகள் (ANGELS), இரண்டாவது ஜின்கள் (JINN) இவை நெருப்புக்கொழுந்தின் (FIRE-Smokeless Flame, (Plasma) மூலம் படைக்கப்பட்டவர்கள். ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் எப்பொழுதும் இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவனுக்கு துதி செய்பவர்கள். அவனது கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள். மலக்குகள் சிறகுகளையுடைய தூய வெண்மை நிறத்தவர்கள் , அவர்களுக்கான வாழ்வுமுறை உண்டு.

நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் சுதந்திர சிந்தனையுடன் படைக்கப்பட்டார்கள். அவர்களது நிறம் யாதென தெரியவில்லை , ஜின்களில் நல்லவையும் உண்டு தீயவையும் உண்டு, ஜின்களுக்கும் மனித வாழ்வு போல குடும்ப முறை உண்டு என ஹதீஸ்களில் காண்கிறோம். அவை கனப்பொழுதில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடப்பெயரும்.. நபி சுலைமான் அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்தி தந்த இறைவன், குர்ஆனில் அவருக்கு ஜின்கள் உதவிய விதத்தையும் கூறுகிறான்.

இறுதியில் களிமண்ணின் சத்தைக்கொண்டு படைக்கப்பட்ட மனிதனும் ஜின்களைப்போல பகுத்தறிவோடு படைக்கப்பட்டான். மனு, ஜின்களை படைத்த நோக்கத்தை அல்லாஹ் கூறுகிறான்.

“ஜின்களையும்,மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.” -அல்குர்ஆன்.52:56.

“களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்புக்கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்” -அல்குர்ஆன்.55:14,15.

களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித உடலில் உள்ளது., அறிவியலறிஞர் சாகன் கூறியது போல மனிதன் உடல் முழுதும் நட்சத்திர தூசு அதாவது star dust நிறைந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் இறைவன் குர்ஆனில் இந்த பூமியில் தோன்றும் யாவும் பூமியிலிருந்தே எடுக்கப்பட்டது என்கிறான். இதற்கும் அறிவியலுக்கும் பொறுந்தவில்லையே என தோன்றலாம். ஆனால் பிரபஞ்ச படலத்தின் தூசு காற்றின் மூலமும், மழையின் மூலமும் பூமியை வந்தடைகிறது. ஒரு நாளைக்கு 6,000 டன் விண்வெளி தூசு பூமியில் படிகிறது. இது படிவதால் தான் பூமியின் மேற்பரப்பில் மணல்பரப்பு தோன்றுகிறது.

நமது பிரபஞ்சம் பலகோடி ஒளியாண்டுகள் தூரம் கடந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை பூமியில் காணும் பலவிதமான படிப்படியான மணல்மேல்திட்டு படிமங்கள் (Soil layers over earth crust ) ல் இருப்பதை வைத்து உறுதி செய்கிறது அறிவியல். பூமி ஓரிடத்தில் நின்று சுழல்கிறது என்கிற நம்பிக்கையை தவிடுபொடியாக்கிய குர்ஆன் வசனம், சூரியன் தன் குடும்பத்து கிரகங்களை இழுத்துக்கொண்டு ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது என்று. சூரிய குடும்பம் மட்டுமல்லாது ஒவ்வொரு பால்வெளியும் கோடான கோடி நட்சத்திரக்கூட்டங்களை கூட்டிக்கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 560 மைல் என்கிற அளவில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி முடிக்கிறது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எனவே பூமியில் விண்வெளி தூசிப்படலம் படிவதும் அதில் விளையும் பொருட்களை உணவாக உண்ணும் மனிதனிடம் மட்டுமல்லாது எல்லா உயிர்களிடமும் நட்சத்திர கூட்டுப்பொருட்கள் கலந்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்பு சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலைக் (Plasma-Radiant energy) கொண்டுள்ளார்கள்.

பிளாஸ்மா நிலையில் ஜின்கள்

உலகில் ஒவ்வொரு பொருளும் திட,திரவ,வாயு என மூன்று நிலைகளில் இருக்கின்றன. மூன்றாவது நிலையான வாயுவை உஷ்ணப்படுத்தும்போது அணு தனது எலக்ட்ரான்களை இழந்து நேர் மின்,எதிர் மின் அயனிகள் தனித்தனியாக பிரிந்து (Plasma) பிளாஸ்மாவாக மாறுகிறது.

புகையற்ற நெருப்புக் கொழுந்தினால் (Smokeless Flame-Plasma) படைக்கப்பட்ட ஜின்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் இறைவனிடமிருந்து தூரமாக்கப்பட்டு ஷைத்தான்களாக, வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் நல்ல ஜின்களும் இருக்கின்றனர். இறுதிக்காலம் வரையிலும் இவர்களுக்கு சில சக்திகளை, ஆற்றலை இறைவன் கொடுத்துள்ளான். இதைக்கொண்டே கெட்ட ஜின்கள் (ஷைத்தான்) மனிதர்களை ஏமாற்றி வழி கெடுக்கின்றனர்.

மனிதர்களைப்போல் மூன்று நிலைகளில் (3 டைமேன்சன்) இல்லாமல் நான்காவது நிலையான பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல!

ஏழு வானங்களில் தாழ்வான வானத்தில் நட்சத்திரத்தை படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த தாழ்வான வானம் வரை ஜின்கள் சென்று வர ஆற்றல் பெற்றுள்ளனர் என்பதை அல்குர்ஆன் மூலம் அறியலாம்.

“திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம். –அல் குர்ஆன். 67:5,41:12.

இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக் காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள்.

உதாரணமாக நமது இதயத்தை நம் கண்ணால் காண முடியாது. உடலின் உள்ளே நெஞ்சில் இதயம் மறைக்கப்பட்டுள்ளது. ஜான் (இதயம்) என்ற சொல் வந்ததின் காரணம் இதுதான். ஜின்கள் வெப்பத்தால் படைக்கப்பட்டதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. மின்காந்த வெப்ப அலை வடிவில் உள்ளனர். (Electromagnetic-Plasma Radiant Energy)

Jinn என ஆணினத்தையும் , Jiniri என பெண்ணினத்தையும் அராபிய இலக்கியங்களில் கூறுவார்கள். ஜின் என்கிற சொல்லின் அரபு அர்த்தம் “மறைத்துக்கொண்ட” அல்லது மறைந்துகொண்ட (To hide or To conceal) , எனினும் பழைய லத்தின் மற்றும் கிரேக்க வேர்ச்சொல்லில் பிறந்த ஜீனியஸ் (genie- genius) என்கிற சொல்லில் இருந்து தோன்றியதாக இருக்கலாம் என்பதும் மொழியில்லாளர்களின் கருத்து. ஜீனியஸ் என்றாலே அதிபுத்திசாலி என பொருள். இறைவன் , மனிதனுக்கு சிரம் பணிய கூறியபோது இப்லீஸ் கூறியதும் இது தான். அதாவது என்னைவிட அறிவிற் குறைந்த இந்த மனிதப்பிண்டத்திற்கா நான் மரியாதை செலுத்த வேண்டும் ? என கேட்டதாக குர்ஆன் கூறுகிறது.

மனிதகுலத்திற்கும் ஜின்களுக்கும் தாம் இறைத்தூதராக அனுப்பப்பட்டதாக மாநபி முஹம்மது கூறுகிறார், இதுபற்றி குர்ஆனின் 72 வது சூரா விரிவாக பேசுகிறது.

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

72. ஸூரத்துல் ஜின்னு(ஜின்கள்)
மக்கீ, வசனங்கள்: 28
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

72:1 قُلْ اُوْحِىَ اِلَىَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًاعَجَبًا ۙ‏

72:1. நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

72:2 يَّهْدِىْۤ اِلَى الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ‌ ؕ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ‏

72:2. “அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

72:3 وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ‏

72:3. “மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

72:4 وَّ اَنَّهٗ كَانَ يَقُوْلُ سَفِيْهُنَا عَلَى اللّٰهِ شَطَطًا ۙ‏

72:4. “ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

72:5 وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًا ۙ‏

72:5. மேலும் “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

72:6 وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۙ‏

72:6. “ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

72:7 وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ يَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۙ‏

72:7. “இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

72:8 وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ‏

72:8. “நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

72:9 وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ‌ ؕ فَمَنْ يَّسْتَمِعِ الْاٰنَ يَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۙ‏

72:9. “(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.

72:10 وَّاَنَّا لَا نَدْرِىْۤ اَشَرٌّ اُرِيْدَ بِمَنْ فِى الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۙ‏

72:10. “அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

72:11 وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ‌ؕ كُنَّا طَرَآٮِٕقَ قِدَدًا ۙ‏

72:11. “மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்; அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர்; நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

72:12 وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِى الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۙ‏

72:12. “அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.

72:13 وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰٓى اٰمَنَّا بِهٖ‌ ؕ فَمَنْ يُّؤْمِنْۢ بِرَبِّهٖ فَلَا يَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۙ‏

72:13. “இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

72:14 وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ‌ؕ فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓٮِٕكَ تَحَرَّوْا رَشَدًا‏

72:14. “இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் – எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

72:15 وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۙ‏

72:15. “அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று)

என ஜின் கூறியதாக குர்ஆன் ஆயத்துகளை காணமுடிகிறது. ஜின்களிலும் முஸ்லிம் உண்டு. குர்ஆன் என்பது மனிதர்களுக்கும் ஜின்களுக்குமானது. ஜின்களில் சில நபி முஹம்மது அவர்களுக்கு கண்ணில்பட்டதாகவும்…தொழுகை வைக்கும் நேரங்களில் அவை சிற்சில சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் அவற்றை ரசூலுல்லாஹ் அவர்கள் கண்டிப்பதாகவும் சிலநேரம் அதட்டி வெளியேற்றுவதாகவும் ஹதீஸ்கள் உள்ளன.

ஜின்களை துணைக்கு அழைத்து அவற்றை தனக்கனம் ஏற்றி விடும் சில மனிதர்களும் உள்ளார்கள் என வரும் குர்ஆன் வசனத்தை நாம் காணலாம்..ஆனால் நபி சுலைமான் தவிர வேறு யாருக்கும் பூமியில் ஜின்கள் தென்பட்டதில்லை. நபி சுலைமான் எழுப்பிய முதல் ஆலயத்தை கட்ட உதவியது ஜின்கள் தான் என குர்ஆனில் உள்ளது. (பெயர்- மாரீத்) ஜின்களுக்கும் மனிதர்களை போல தனித்தனியான பெயர்கள் உண்டு. அவை உண்பதில்லை உறங்குவதில்லை… ஆனால் அவற்றிற்கு வாழ்க்கை உண்டு. ஜின்களுக்கு உடலமைப்பு கிடையாது… எனவே உணவும் நீரும் அவசியப்படவில்லை.

மலக்குகளை புதன்கிழமை படைத்ததாகவும், ஜின்களை வியாழக்கிழமை படைத்ததாகவும், மனிதர்களை வெள்ளியன்று படைத்ததாகவும் இஸ்லாத்திற்கு முந்திய புராதன அராபிய கதைகள் கூறுகின்றன. ஜின்களை வழிபட்டு வந்த அரபுக்கூட்டமும் உண்டு. இன்றும் கூட secret societies ஐ சேர்ந்தவர்கள் satanic rituals ஐ கையாளுகிறார்கள் , அதாவது ஷைத்தானிய வழிபாடு. எல்லா ஜின்னும் ஷைத்தான் அல்ல…தீய ஜின்களும் இறைவனை மறுத்தவர்களும் ஷைத்தான்கள் எனப்படுவர். ஜின்களுக்கும் மனிதர்களை போல மரணம் உண்டு என்பதும் புராதன அரபு நம்பிக்கை.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *