Alians 5

Alians and muslims | Aliens and Extraterrestrials | Part -5

ஜின்களை போல மலக்குகள் உணவருந்தாத நீர் குடிக்காத உயிர் வாழ்விகள் தான் என்றாலும் அவற்றிற்கு ஆண்-பெண் பாலினம் கிடையாது, அவர்கள் இனப்பெருக்கம் செய்ய தேவையற்ற வாழ்விகள், இறைவனது கட்டளையை செவியேற்றவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அதனை நிறைவேற்ற பிறப்பெடுத்தவர்கள். அவர்களே சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் காவலர்களாய் நியமிக்கப்பட்டவர்கள். இறைவனின் சேவைக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட மலக்குகளுக்கு இறைப்பணி தவிர வேறு வேலையில்லை. அவர்களும் விண்வெளியில் உலா வருபவர்கள் தான் என்றாலும் அவர்களில் யாரையும் பூமி வாழ் மனிதர்கள் கண்டதில்லை. நபிமார்களை தவிர.

1927 ல் சர்.பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்ட் என்பவர் ஒரு நூல் எழுதுகிறார். (”Life in Star ”by Sir.Fransis Younghusband-Published. John Murray-London.) “நட்சத்திரங்களில் உயிர்கள்”. இதில் நட்சத்திரங்களில் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே.

1980 ல் விஞ்ஞானிகள் (G.Feinberg & R.Shapiro) பெய்ன் பர்க், மற்றும் ஷாப்பிரோ ஒரு ஆய்வு நூல் எழுதுகிறார்கள் “Life Beyond Earth” பூமிக்கு அப்பால் உயிர்கள். (Published by  William Morrow and co.Inc.New York-1980.) அதில் அவர்கள், நட்சத்திரம் மற்றும் நமது சூரியனின் பிளாஸ்மாக்களில் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் இவ்வுயிரினங்களுக்கு பிளாஸ்மா பீஸ்ட் (Plasma Beast) என்று பெயரிட்டனர்.

பூமியில் கார்பன் மற்றும் நீரின் இரசாயன மாற்றத்தால் வாழும் மனிதன் மற்றும் பல ஜீவ ராசிகள் இரசாயன உயிரிகளாக (Chemical Life) இருப்பது போல் சூரியனின் பிளாஸ்மா வெப்பத்தில் வாழும் ஜின்கள் இயற்பியல் உயிரினமாக (Physical life) இருக்கலாம். இவைகள் சூரியக் கதிர்களை சக்தியாக கிரகித்து (Radiant energy) செயல்படலாம்.

குர்ஆனில் இதுபற்றி ஆராய்ந்தால் , பூமியை தவிர வேறு வாழ்விடம் உங்களுக்கு இல்லை , நீங்கள் இந்த பூமிக்குரியவர்கள், இது தவிர வேறு எங்கும் மனிதனோ அல்லது பூமியில் வாழும் எந்த உயிரோ வாழவே முடியாது என்பதை ஆணித்தரமாக அடித்துக்கூறுகிறது. ஆனால் இது மனிதனுக்கும் மனிதனை போல வாழும் பூமியின் ஜீவராசிகளுக்கும் தான்.. காரணம் பூமிக்கு தான் Atmosphere எனும் பூமிமேற்படலம் உள்ளது. இதற்கு மேல் ஏழு விதமான காற்று புகும் கட்டமைப்புகள் இருக்கின்றன. ( Troposphere. …Stratosphere. …Mesosphere. …Thermosphere. .ionosphere..Exosphere and ozone ) இதுபற்றியும் குர்ஆன் கூறுகையில் ஏழு வானங்கள் என்கிற சொல்லினை தெளிவாக பயன்படுத்துகிறது. இந்த ஏழு நிலை வானத்தை தாண்டி சூரியனின் வெப்பக்கதிரும் அதிர்வலையும் நம்மை நேரடியாக தாக்காத அளவிற்கு பாதுகாக்கிறது. இதுபோலவே தான் படைத்த அனைத்து கிரகங்களையும் தனித்தனி சிறப்புகள் கொண்டு இறைவன் பாதுகாப்பதாகவும் கூறுகிறான்.

அது என்ன பாதுகாப்பு?

அது தான் பூமிக்கு இறைவன் கொடுத்த வளிமண்டல படலம் (Atmosphere layers ) இந்த மண்டலம் நமக்கு செய்யும் நன்மையில் முதன்மையானது குளிர்ந்த தட்பவெப்ப நிலையை பூமியின் மீது எப்போதும் வைத்திருப்பது, சூரியனின் நேரடி புற ஊதா கதிர்கள் தாக்காமலும்…பூமி சுழல்வதன் மூலம் நான்கு விதமான சீதோஷ்ண நிலையும் நமக்கு மாறி மாறி வருகிறது. ஒரே அளவான வெயிலோ ஒரே அளவான குளிரோ மனித சஞ்சாரத்திற்கு உதவாத ஒன்று. பூமி விளைய வேண்டுமெனில் அதற்கு மழையும் தேவை வெயிலும் தேவை.

அதுபோல பிரபஞ்சத்தில் எல்லா கிரகங்களுக்கும் தனித்தனியான செட்டிங்கை இறைவன் செய்துள்ளதாக குர்ஆனில் கூறுகிறான்.

‘(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்'(23:17) 

 

மேற்கண்ட வசனத்தில் நம்மை மாதிரி வேறு படைப்பினங்களும் உள்ளன. அந்த படைப்பினங்களுக்குத் தேவையானதையும் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய அல்லாஹ் அடுத்த வசனத்தில் நம் பூமியை 7 பூமி என்று கூறுகிறான்.

அவனே 7 வானங்களையும், பூமியிலும் அதே போன்றும் படைத்தான்.’ (65:12).

இதைப் பார்க்கும் போது நாம் வாழும் பூமியைப் போன்ற வேறு பூமிகளும் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.

மனிதனுக்கு தான் உட்சபட்ச வெப்பத்தை தாங்கி விண்வெளியில் வாழ இயலாதே தவிர…எத்தகைய கொடிய வெப்பத்தையும் தாங்கி வாழக்கூடிய உயிர்கள் விண்வெளியில் இருக்கலாம் என்பது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்ஸ் போன்றவது கூற்று. முதல் வானத்தில் வந்து ஒட்டுக்கேட்கும் அளவிற்கு ஜின்களுக்கும் , தினம் தினம் பூமிக்கு இறங்கி வர மலக்குகளுக்கும் இயல்கிறது என்றால் நிச்சயமாக இது உண்மை தான்.

பிரபஞ்சத்தில் பிளாஸ்மா உயிர்கள்

சூரிய வெப்பத்தில் உருவாகும் பிளாஸ்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ள தூசு (Cosmic Dust) உடன்  சேர்ந்து மின்னூட்டம் பெற்று பூமியில் உள்ள DNA உயிர்கள் போன்று மாறுவதாக ஜெர்மனி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம் கூறுகிறது.

இதே ஆய்வை விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ( ISS- International Space Station) ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்தி பிளாஸ்மா உயிர் உருவாவதை கண்டு பிடித்தனர். இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது.

Are we living in a Plasma Brain? பிரபஞ்சத்தில் பிளாஸ்மா ஜின்கள்

பூமியில், விளக்கு சுடர், பிளோரசன்ட், நியான் விளக்குகள் மற்றும் இடி மின்னலின்போதும் பிளாஸ்மா உருவாகிறது. விண்வெளி முழுவதும் 99% (Ionised Plasma) பிளாஸ்மாவே நிறைந்திருக்கிறது. நமது பிரபஞ்சம் 96% கரும் சக்தி,கரும் பிண்டம் (Dark Energy & Dark Matter) நிறைந்த இருள் வெளி.

நெருப்புச் சுடரில் (பிளாஸ்மா) ஜின்கள் படைக்கப்பட்டு இருப்பதால், இதனை எளிதாக விளக்க, ஜின்கள் மிகச் சிறிதாக ஒடுங்கி சுருங்கி பிரமாண்ட உருவமாக விரிவடையும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதை விஞ்ஞானிகள் கற்பனையாக கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்.

அரபியர்கள் புகழ் பெற்ற “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்ற நூலை உலகிற்கு அளித்தனர். அதில் விளக்கிற்குள் இருக்கும் ஜீனி ,தனது எஜமான் விரும்பிய சகாயங்களை சாதித்துக்கொடுப்பது போலவும், எத்தனை பெரிய பிரம்மாண்டமான விஷயமாகிணும் அதனை அசால்டாக செய்து முடிப்பது போலவும் அதற்காக தனது உருவத்தை ராட்சத அளவில் மாற்றியும் பிறகு விளக்கினுள் உட்புகும் போது சிறிய வடிவில் மாறி விடுவது போலவும் காட்டிருப்பார்கள். ஜீனி எனும் ஜின் வேண்டுமென்கிற உருவத்தை எடுத்துக்கொள்ளும் எனவும் கற்பனையாக காட்டியிருப்பார்கள் உண்மையில் இது சாத்தியமா நமக்கு தெரியாது.

குர்ஆனில் மனிதனை சிரம் பணியாத இப்லீஸ் தன்னை மனிதனை விட மேலானவன் என நினைத்து கொண்டு கர்வம் பிடித்தவனாக இருந்தால் என்கிற வசனம் மூலம் ஜின்களுக்கு அசாத்திய சக்தி உண்டென்பதை உணர முடிகிறது.  வானவர்களின் உரையாடல்

2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி ”நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்”” என்று கூறியபோது,

அவர்கள் ”(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக

உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்

அ(தற்கு இறை)வன் ”நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்”” எனக் கூறினான்.“(நபியே! நினைவு கூர்வீராக!)

“நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்

“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது:

அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);

அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள். இப்லீஸைத் தவிர;

அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த)

காபிராக மாறிவிட்டான். – என வானவர்கள் தங்களுக்குள் உரையாடியதாக வரும் வசனங்களை வைத்து ஜின் சுயமாக சிந்திக்க கூடியவை என விளங்க முடிகிறது.

ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?

ஏலியன்களை தொடர்பு கொள்ள ரேடியோ அலை தொலை நோக்கி (Radio Telescope) மூலம் கடந்த ஐம்பது வருடங்களாக கடும் முயற்சி செய்தும் பலனில்லை இதுவரை பதிலில்லை. காரணம் ரேடியோ அலைகளால் ஏலியன்-ஜின்களை தொடர்பு கொள்ள முடியாது. ஏனெனில் ஜின்கள் எலெக்ட்ரோ மாக்னடிக் ரேடியன்ட் ஆற்றல் உள்ளவர்கள். கடும் பிளாஸ்மா வெப்பத்தில் படைக்கப்பட்டவர்கள். அகச் சிவப்பு கதிர்களை வெளியிடக்கூடியவர்கள்.

கடந்த, ஜூன் 2013 ல்  வெளிவந்த புகழ்பெற்ற “ASTRONOMY” இதழில் பிரபலமான ஐந்து விண்ணோக்கி ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவு  வெளி வந்தது. கடந்த நாற்பது வருடமாக ரேடியோ டெலஸ்கோப் (Radio Telescope) மூலம் ஏலியன் என்னும் பிற உயிரினத்தை தேடி அலைந்து  தோல்வியுற்றார்கள்.

காரணம் பிரபஞ்சத்தில் வெப்பத்தை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் உள்ளதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. (“The energy footprint of life and civilization appears as infrared heat radiation,” says Kuhn, the project’s lead scientist University of Hawaii’s Institute for Astronomy,.) எனவே வெப்பத்தை தேடும் (Heat Seeking) அகச் சிவப்பு கதிர் தொலைநோக்கி (Infra-Red Telescope) மூலம் இனி தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இந்த தொலை நோக்கி (The Colossus Telescope) ஒரு பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு முழு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும் James webb space telescope போன்ற இன்னும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்களை அமைக்க நாஸா திட்டமிட்டு வருகிறது. அந்த சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் பால்வெளியின் இறுதி முனை வரை துல்லியமாக பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையில் விஞ்ஞானிகள் செயலாற்றி வருகின்றனர்.

           -Ummu Aadil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *