ஏலியன்கள்

Alians and muslims | Aliens and Extraterrestrials | Part -1

ஏலியன்கள் – குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் வழியில் இவர்களை பற்றிய நிலை என்ன?

Alians – ஏலியன்ஸ் என்றதும் நமது நினைவுகளை கனநொடியில் வந்தடையும் ஒரு உருவம்…மனிதனை போன்ற தோன்றத்தில் ஆனால் கண்கள் பெரிதாகவும் உருவம் விகாரமாகவும் தோன்றும் ஒரு அயல்கிரக வாழ்வினம் என்பது தான்.

அது இருக்கிறதா இல்லையா என்பதை இன்றும் கூட அறியாத விண்ணியல் விஞ்ஞானிகள் மக்களுக்கு புரிய வைப்பதற்காக ஒருவித கற்பனையான தோன்றத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர். அந்த கற்பனை என்பது ஏழு உலகத்தை தாண்டி எட்டாவது உலகத்தை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு நீளமானது.

பொதுவாக அறிவியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை நம்மிடையே கூற முனையும் அறிவாளிகள் நாம் புரிந்துகொள்வதற்காக என்பதை தாண்டி அவர்களுக்கு விளக்க தெரியாத காரணத்தால் புனைவு கதைகளை புகுத்தி Science என்பதில் இருந்து Science fiction க்கு தாவி விடுவார்கள். அது அவர்களுடைய இயல்பு. இதற்கு காரணம் நமது அறிவுக்கி எட்டாத விஷயங்களை நாம் கற்பனைகளுக்குள் புகுத்தி பார்க்க முயலும் ஒரு உளவியல் தோணல் தான் தவிர வேறில்லை.

ALIENS

அறிவியலோடு பிறந்து வளரும் யாராலும் விண்ணியல் விந்தைகளுக்கு கற்பனை வடிவம் மாத்திரமே கொடுக்கமுடியும் தவிர , முற்றிலுமான உண்மைதன்மையை நிரூபிக்க இயலாது. ஆகையாலே எந்த துறை அறிவியல் கண்டுபிடிப்பானாலும் அதில் உண்மை பாதி , கண்டுபிடிப்பாளரின் அனுமானம் பாதி என அறிவியில் உலகம் விதிகள் வகுத்துள்ளது. ஐன்ஸ்டீன் இயற்றிய தியரிகள் கூட இன்னும் யாராலும் முறியடிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம்…அவரது அனுமானத்திற்கு பிறகு அவற்றை யாரும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே காரணம் தவிர்த்து ஐன்ஸ்டீன் கூறியது யாவும் மறுக்கவியலாத உண்மை என்பதாகப்படாது.

சரி ஏலியன்ஸ், அதுபற்றி தெரிந்து நமக்கென்னாக போகிறது. அவர்களை கண்டுபிடித்து நாம் என்ன அவர்களோடு பழகி , கிரகம் விட்டு கிரகம் தாண்டியா போகப்போகிறோம்…! அவர்களை தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்ன, என்கிற சலிப்பு தோன்றினாலும் அவர்களை பற்றிய முன்னறிவிப்போ அல்லது அவர்கள் வந்து போனதற்கான அடையாளங்களோ எங்காவது தென்பட்டுவிடாதா என ஒரு கியூரியாசிடியில் தேடுவோர் தான் அதிகம்.

ஏலியன்ஸ் பூமியில் வந்தது உண்டா? இல்லை, ஏலியன்ஸை பார்த்தவர் எவரும் உண்டா?
இல்லை , ஏலியன்ஸ் பற்றி நாம் இன்றுவரை காண்பது கேட்பது படிப்பது அத்தனையும் கட்டுக்கதையா? அப்படியென்றால் அவற்றை புனைந்துவிடுவது யார்? அதனால் அவர்களுக்கென்ன லாபம் ?

இது எல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்.இந்திய கோவில்களில் இருக்கும் கோபுரங்களை புராணங்களில் விமானங்கள் என்றது ஏன்? கோவில் கோபுரங்கள் அனைத்தும் வேற்றுகிரகவாசிகளுக்கு ஒரு கண்காணிக்கும் பகுதியா? எகிப்திய பிரமிடுகளை பாரோக்கள் கட்டியது ஏலியன்ஸ் உதவி கொண்டா? அமெரிக்க அரிசோனா மாகாணத்தில் சைலன்ட் வேலியில் யஜ்ஜூஜ் மஜ்ஜூஜ் மனிதர்களை போல குட்டை மனிதர்கள் வாழ்கிறார்களா? அவர்களது மலையிடுக்கின் வாயில் தான் நரகின் நுழைவாயில்களா? அன்டார்டிகா, பர்முடா முக்கோணம், ஈஸ்டர் தீவுகள், ஸ்டோன்ஹெஞ் ஆகியவை ஏலியன்ஸ் நடமாடும் மறைமுகப்பகுதியா? அமெரிக்க ஏரியா 51 பகுதி , ஏரியன்ஸை அடைத்து வைத்து ஆராய்ச்சிகள் செய்யும் மர்ம பிராந்தியமா..? அமெரிக்க அதிபர்களில் சிலர் ஏலியன்களோடு தொடர்புடையவர்கள் என 1950,60 களில் நாளுக்கு நாள் தகவல் வெளியாகி பரபரப்புக்குண்டானதே அவை யாவும் உண்மையா? டாவின்ஸி வரைந்த மடோனா ஓவியத்தில் ஒரு ஓரமாக பறக்கும்தட்டு போன்ற உருவம் உள்ளதையும்…அதனை ஒருவர் அண்ணாந்து பார்ப்பது போல உள்ளதும் நமக்கு கூறுவதென்ன? எகிப்திய ஓவியங்களில் பல இடங்களில் ஏலியன்ஸ் போன்ற தோற்றமுடைய மனிதர்கள் யார்? உலகம் முழுதுமுள்ள பழங்கால குகை ஓவியங்களில் வானில் இருந்து இறங்கி வருவது போன்றதான ஓவியங்களில் வினோதமாக உடலமைப்புடைய மனிதர்கள் யார்? இவை எதற்கும் நான் பதில் கூறப்போவதில்லை.

இதற்கான பதில்களையும் அனுமானங்களையும் கற்பனை விளக்கங்களையும் மேலதிகமாகவே ரா.பிரபு, சுதாகர், ரஹ்மான்சயித் போன்ற அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் கொடுத்துவிட்டார்கள்…எல்லாமே ஒரே தரவுகள் , எல்லாமே ஒரே நிகழ்வுகள், மேலைநாட்டவர் எழுதி வைத்த புனைவுகளை தமிழில் மொழிப்பெயர்த்து உண்மை எழுத்தாளர்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்துவிட்டு தங்களை அறிவியல் காதலர்கள் என பெயரிட்டுக்கொண்டது தவிர இவர்கள் வேறெதும் செய்யவில்லை. மனிதன் நடமாடாத பகுதிகளில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருந்துகொண்டு அங்கே மனிதரை அண்டவிடாமல் செய்துவிட்டதாக இதுவரை உலகின் 50 வகையான பகுதிகளை பேய், பிசாசு அதனுடன் ஏலியன்ஸ் முத்திரை குத்தி பக்கம் பக்கமாக கப்ஸா விட்ட கதைகளை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

எனவே நாம் இந்த தொடரில் இஸ்லாம் எனும் ஒரு புதுமையான மார்க்கம் , ஏலியன்ஸ் எனும் அயல்கிரகவாசி பற்றியும் எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்ஸ் எனும் அண்டங்களில் வாழும் உயிர்ஜீவிகள் பற்றியும் அந்த மார்க்கத்தின் வேதநூலிலும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர் அவரின் வழிகாட்டுதல்களில் ஏதும் தகவல் உண்டா என்பதை பற்றியும் மட்டும் காண்போம்.

-Ummu Aadil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *