Youtube Videos

YouTube என்றாலே உங்களது நினைவிற்கு வருவதென்ன? Troll videos, song videos,movie clips videos ஆம், இவை அனைத்தையும் நமக்கு மிகமிக எளிய வழியில் கொண்டுவந்து கொடுத்த பெருமை அதற்கு உண்டு. YouTube என்றால் இன்னொன்றும் உண்டு...அது தான் Fake videos.

ஆம், ஒரு வீடியோவை தேடி அந்த வீடியோ கிடைக்கப்பெறும் ஒரு பேஜில் கட்டாயமாக ஐந்து போலி வீடியோக்களாவது இருக்கும். அதில் மனித முகத்துடன் பிறந்த பன்றி, திடீரென எங்கோ படமெடுக்கப்பட்ட கடல்கன்னி, அந்தரத்தில் பறக்கும் பள்ளிவாசல், வானில் ஒளிவீசி மறைந்த UFO, குழந்தைகளின் சாகசம், ரோட்டில் எந்த தடையும் இல்லாமல் முட்டிநின்ற கார்கள், டிராபிக் கேமராக்களில் பதிவான பேய்கள் என பலவிதமான போலி வீடியோக்களை நமக்கு பிரஸ்க்ரைப் பண்ணுவார்கள். அது எல்லாம் பேக் வீடியோ என கண்டுபிடிக்க பெரிய சோதனைக்கூட ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவையில்லை... அந்த வீடியோக்களுக்கு கீழ் கமண்ட்ஸ் பகுதியில் பலரும் வந்து அந்த வீடியோ பதிவிட்டவரை வண்டவண்டையான வார்த்தைகளால் துவைத்து காயப்போட்டிருப்பார்கள். அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

சரி, நமக்கு தெரிந்து பப்ளிக் வீடியோக்களை பதிவிட YouTube மட்டும்தான் உள்ளதா? இல்லை DailyMotion, Vimeo போன்ற சர்விங் எஞ்சின்களும் உண்டு. அவை ஏன் YouTube அளவிற்கு பிரபலமடையவில்லை.. காரணம் அவை பேக் மற்றும் தரமற்ற வீடியோக்களுக்கு ஃபில்டர் போட்டு வைத்திருக்கும். அத்தனை சுலபமாக அவற்றில் ஒரு போலி வீடியோவை பதிவேற்றம் செய்துவிட முடியாது. உலகில் பிராடுகள், போர்ஜரிகளால் மட்டுமே நினைத்த இலக்கை விரைவில் எட்ட முடியும் என்கிற தத்துவம் இதன் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

YouTube videos அனைத்தும் Fake அல்ல... என்றாலும் அனைத்து Fake videos ம் YouTubeல் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. சற்று நாட்கள் வரை டிரம்ப்-புடின் சம்பந்தமான நிறைய போலி வீடியோக்களை பரவ விட்டனர். அதாவது இருவரும் காரசாரமாக திட்டிக்கொள்வது போல. அவர்களுடைய வாய் அசைவும் அச்சு அசலாக அப்படியே இருந்தது. பிறகு டிரம்ப்-கிம் இடையேயான போலி வீடியோக்களை பரவ விட்டனர். அவற்றை உண்மையென நம்பியவர்கள் அந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து முகநூலிலும், ட்விட்டரிலும் அவங்க அப்படி பேசிக்கிட்டாங்களாம் என பதிவுகளை எழுதி தள்ளி நேரத்தையும் போக்கி கொண்டனர். அதுவும் இப்போது ஓய்ந்து கரன்ட்டாக டிரம்ப் மகள் இவான்கா உடைய போலி வீடியோக்களை பரப்பிக்கொண்டுள்ளனர்.

அதாவது இவான்கா தனது சொந்த இமெயில் ஐடி மூலம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தனிப்பட்ட முறையில் நிறைய உத்தரவுகளை கொடுத்துள்ளார் என்பது தான் அது. அரச பதவி சாராத ஒருவர் தனிப்பட்ட இமெயில் ஐடி மூலம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அதிபரின் மகள் என்ற தோரணையில் உத்தரவுகள் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது. இவான்காவின் போன் Hack செய்யப்பட்டு யாரோ ஒருவரால் இயக்கப்பட்டுள்ளது என கூறி ஊடகங்களின் வாயை அடைத்தார் டிரம்ப். தப்பு செய்துவிட்டு தப்பிக்க நினைப்பவர்களுக்கு அறிவியல் சாதனங்கள் துணை போகிறது என்று கூட வைத்துக்கொள்ளலாம்.

YouTube video, fake video ,photo morphing, graphical altering, Photoshop, Account Hacking, Phone/ system Hacking, Voice mimic இவை அனைத்தும் பழையது. இப்போது புதியதாக அவதாரம் எடுத்துள்ள விஷயம் தான் Machine Learning algorithm ! இதை வைத்து என்ன செய்யலாம்...? வாங்க படிக்கலாம். முதன்முதலில் குடும்ப பெண்கள் தங்களது படங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டாம் என்று கூறினார்கள். அவர்களது முகத்தை மட்டும் கத்தரித்து ஆபாச உடையணிந்த அல்லது ஆபாச இணையதளங்களில் வரும் பெண்களின் முகத்தில் ஒட்டிவிடுவார்கள். திடீரென பார்ப்பவருக்கு அது போட்டோசாப் என்றல்லாம் கண்டுபிடிக்க இயலாது. இது சாதாரண பெண்களை செய்யும் போது அமைதியாக இருந்த சைபர் கிரைம், பிரபலமான பெண்களை வைத்து செய்தவுடன் சூடாகிவிட்டனர். ஆனால் போட்டோசாப் என்பது தற்போது சிறுவயது குழந்தைகளும் ஆண்ட்ராய்டு போனில் வைத்து வெளுத்துகட்டுகின்றனர்.

Smule ,Tiktok , dubsmash போன்றவற்றில் பெண்கள் தங்களது முக பாவணைகளை மிக தெளிவாக காட்டி பாடல் வரிகள் அல்லது டயலாகுகளுக்கு ஏற்றவாறு வாயசைத்து வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதன் விளைவு நீங்கள் நடிக்காமலேயே ஒரு போலி ஆபாச வீடியோவை அவர்கள் தயாரித்து விடுகின்றனர். அதில் நிர்வாண உடலுடன் நீங்கள் தோன்றுவீர்கள், அதில் நீங்கள் செய்யும் முகபாவணை தெள்ளத்தெளிவாக இருக்கும். உங்களுடைய குரலும் அச்சுஅசலாக அப்படியே இருக்கும், நீங்களே முன்நின்று இதை மறுத்தாலும் உலகம் உங்களை நம்பாது..அது எப்படி சாத்தியம்?

சமீபத்தில் ஒரு டிக்டாக் நபர் எந்தவித உபகரணமும் இன்றி இம்மி பிசகாமல் நடிகர் விஜய்சேதுபதி போலவே பேசி அசத்தினார். விஜய் சேதுபதியே வந்து என் ஆவி உன் உடலில் புகுந்ததா என கேட்கும் அளவிற்கு அதே மோடுலேசன், ஸ்ருதி சுத்தமான அவருடைய பேஸ் வாய்ஸுடன் அதே அவருடைய வார்த்தைகள். இறைவனுடைய படைப்பில் இயற்கையாகவே மிமிக் செய்ய குரல் கிடைக்கப்பெற்றவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

Machine learning algorithm Technology பற்றி கூற வேண்டுமானால் இது ஒரு ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் அதாவது AI என்று தான் கூறுகிறார்கள். அதாவது ஒருவர் பேசிய ஒரு செகன்ட் வீடியோவாக இருந்தாலும் அதிலிருந்து 60 விதமான முகபாவணையுள்ள ஸ்டில் படங்களை இது சேகரித்துவிடும். இந்த 60 விதமான ஸ்டில் படங்களுக்கு ஏற்ற 100 வார்த்தைகளை டயலாகாக கொடுத்துவிட்டால் பின் நமக்கு ஒரு வேலையும் வைக்காமல் அதுவே நமக்கு தேவையான போலி வீடியோவை தயாரித்து கொடுத்துவிடுகிறது. ஒருமுறை ஒருவரை பற்றி 10 விஷயங்களை கொடுத்தால் அந்த அல்கோரிதம் தன்னை தானே மெருகேற்றி பன்மடங்காக அதனை உயர்த்திக்கொள்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகச்சாதாரணமான ஒரு டெக்னாலஜி என கருதப்பட்ட இந்த பங்ஷன் தற்போது அதனை உருவாக்கியவர்களே ஆச்சரியப்கடுமளவிற்கு தன்னை நிலைநறுத்திக்கொண்டுள்ளது. இதன் சுய வளர்ச்சியை கண்டு அதிர்ந்துள்ள சாப்ட்வேர் விஞ்ஞானிகள் இதன் தற்சார்பு வளர்ச்சி கட்டுப்படுத்த Arms Rays எனும் கட்டுப்பட்டு மையத்தை அமைத்து கண்காணித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இவை மனிதர்களை அடக்கியாள நினைத்துவிட கூடாது என்பதற்காக. இந்த துறைக்கு பிரபல விண்வெளி விஞ்ஞானி எலோன் மஸ்க் தான் தலைவராக உள்ளார்.

இந்த டெக்னாலஜி உடனான மற்றொரு தொடர்புடைய பங்ஷன் Motion capture technology and Vision learning ஆகும். இந்த மோஷன் கேப்சர் டெக் மூலம் நமது முகம் பேசும் போது எத்தனை அளவு விரிவடைகிறது, சுருங்குகிறது, சிரிக்கும் போது கண்கள் எத்தனை அகல விரிகிறது என முகத்தின் ஒவ்வொரு புள்ளியும் தீர ஆர துளாவி எடுத்து விடுகிறது. பொதுவாக Face detection technology பொறுத்தவரை கிரிமினல்களை கண்டறிய சைபர் க்ரைம் மற்றும் க்ரைம் பிராஞ்சு நிபுணர்களால் கையாளப்படும் ஒரு முறையாக இருந்தது. தற்போது அது கம்பியூட்டரில் போலி வீடியோ தயாரிக்கவும் பயன்பட தொடங்கியுள்ளது. Static geometric facial features or face points இவற்றை வைத்து ஒரு நபர் கூறுவது உண்மையா பொய்யா என கண்டறியப்பட்டது. ஒருவரது நொடிக்கு 60 முக பாவம் கொடுத்தாலும் அதனை தனித்தனியாக 100 ஸ்டில் படங்களாக பிரித்து எடுத்து நமக்கு கொடுத்துவிடும்..அதில் ஏதோ ஒரு படத்தில் ஒரு கிரிமினல் கொடுக்கும் சாட்சியம் உண்மை / பொய் என நிரூபிக்கப்படும். (இந்த டெக்னாலஜி சமீபத்தில் வெளிவந்த "விவேகம்" படத்தில் கையாளப்பட்டிருக்கும்)
இந்த போலி வீடியோக்களுக்கு உருவம், அதற்கு ஏற்ற முக பாவம் போக அந்த குறிப்பிட்ட நபரின் அதே குரலும் வேண்டுமல்லவா..? அதற்கும் ஒரு வழி உள்ளது. அது தான் Adobe Voco இந்த அட்வான்ஸ்ட் சாப்ட்வேர் மூலம் ஒரு முறை ஒருவரது குரலை பதிவு செய்து கொடுத்துவிட்டால் போதும் அவர் சிரிக்கும்போது , அழும் போது,கதறும் போது,முனகும் போது ,கெஞ்சும் போது, கொஞ்சும் போது எப்படி எப்படி குரலின் டெசிபலை ஏற்ற இறக்கம் செய்வார் என தானாக புரிந்துகொண்டு அதே போல செய்து கொடுக்கும். இதுவும் ஒரு AI வகை சாப்ட்வேர் தான்.

இத்தனை Advancedஆன விஷயங்களை நன்மைக்கு தவிர்த்து சில நாடுகளின் அரசாங்கங்களே கூட தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. அதாவது ஒரு எதிரி நாட்டு அதிபர் கூறாத ஒரு சர்ச்சை கருத்தை இந்த டெக்னாலஜி மூலம் போலியாக தயார் செய்து அதனை மக்களிடையே பரப்பி, போர் பிரகடனம் செய்ய கூட வாய்ப்பிருக்கிறது. மற்ற எந்த நாட்டை விடவும் சண்டைக்கோழி அமெரிக்கா தான் அடிக்கடி புடின்,கிம், போன்ற பிடிக்காத நாட்டு அதிபர்களின் உருவத்தில் போலி வீடியோக்களை தயாரித்து வருகிறது. கடந்த காலங்களில் அயல்நாட்டு அதிபர்களை Phone Taping and Honeytrap மூலம் சிக்க வைத்து வேடிக்கை பார்த்தவர்களுக்கு தற்போது இந்த Machine learning algorithm + Motion capture technology + Facial point detection + adobe Voco = A fake video தயாரித்து அசிங்கப்படுத்துகின்றனர்.

உலகத்தலைவர்கள், அரசியல்வாதிகள், வணிக பெருமுதலைகள், நடிகர்கள், பிரபலங்கள் என சமுதாயத்தில் இருக்கும் அத்தனை பெருந்தலைகளையும் கவிழ்த்திட பயன்கடுத்தப்பட்ட இந்த ரொபாட்டிக் டெக்னாலஜி தற்போது நம் பக்கத்து வீட்டு பெண்களை அவமானப்படுத்தும் அளவிற்கு மலிவாகிவிட்டது. சாதாரணமாக நீங்களோ நானோ செய்ய இயலாத இந்த அறிவியல் விஷயங்களை இதற்கான படிப்புகளை படித்தவர்களால் ஐந்தே நிமிடத்தில் ஒரு போலி வீடியோ தயாரித்து பழிவாங்க நினைப்பவர்களை அவமானத்தால் தூக்கில் தொங்க வைத்துவிடலாம். போலி வீடியோக்களை கண்டறிய முடியாதா என்றால்? கண்டறியலாம், ஆனால் முக்கியஸ்த்தர்களுக்கு மட்டுமே இந்த வகையான டெக்னாலஜி விஷயங்களில் உதவுவார்கள். வசதி படைத்தவர்களால் பெரிய செலவு செய்து இந்த போலி வீடியோக்களை முறியடித்து வெளியே வர இயலும் ஆனால் மிக மிக மெனக்கெட வேண்டும். காரணம் அசந்தால் நாமே இதை பேசியிருப்போமா? ஒருவேளை நம்மை யாராவது ஹிப்னாடைஸ் செய்து இயக்கி இருப்பார்களா ? என நம்மை நாமே சந்தேகிக்க வைக்கும் ஒரு சிவியரான விஷயம் இது.

வீடியோ போட்டு மகிழ்ந்துகொண்டிருந்த பெண்களுக்கு சாவுமணியடிக்கும் இந்த போலி வீடியோ தயாரிப்பாளர்கள் நம் வீட்டில் அருகில் கூட இருக்கலாம். நட்பு ரீதியாக நீங்கள் அனுப்பிக்கொடுத்த வீடியோக்களை ஸ்டில் பிக்சர்ஸாக மாற்றி குரல் மாற்றி போலி ஆபாச வீடியோவாக எடுத்து வெளியிட்டுவிட முடியும்.

-Ummu Adil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *