write for us-tamil

கட்டுரைகள் சமர்ப்பித்தல்:

உங்கள் ஆக்கப்பூர்வ கட்டுரைகளை பொதுவெளியில் பதிவுசெய்யவும் உங்கள் கல்வி ஆற்றலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா ?? ஆம், என்றால் நீங்கள் சரியான இடத்தில் இருக்கின்றீர்கள். இந்த தளம் நல்ல மற்றும் தனிப்பட்ட பதிப்பாளர்கள் / எழுத்தாளர்களுக்கான தனிப்பெறும் களமாக உருவாக்கப்பட்டுள்ளது .

இணைய உலகின் வலைப்பூ எழுத்தாளர்கள் சமூகத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் , தங்களது விருப்பத்திற்கேற்ப வரலாறு, இலக்கியம், மருத்துவம், பொது அறிவு, அறிவியல், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, உளவியல்,மனோவியல், உலக நிகழ்வுகள், உலக அதிசயங்கள், முதலியன தொடர்பான புதிய கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் வரவிருக்கும் புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் விதமாகவும் தங்களது அறிவார்ந்த கருத்துக்களை பகிர்ந்து மற்றும் பரந்த பார்வையாளர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டும் நீங்கள் தங்களது படைப்புகளை இங்கே பதியலாம்.

www.earabictoenglish.com/blog என்ற இந்த இணைய பக்கத்தில் உங்கள் கட்டுரைகளை சமர்ப்பிப்பது என்பது ஏன் ஒரு சிறந்த யோசனை என்பதை புரிந்துகொள்ள சில விவரங்களை கூற விரும்புகிறேன்.
  1. உங்கள் கட்டுரைகளை ஆன்லைனில் வெளியிடுவதற்கும், அதை எப்போதும் ஒரு இடத்தில் சேமிப்பதற்கும் எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுப்பதற்கும் இது ஒரு அற்புதமான தளம்.
  2. உங்கள் வார்த்தைகளை உள்ளது உள்ளபடியே வெளியிடுவது மட்டும் அல்லாமல் அதனை எங்களது அனைத்து சமூக ஊடகங்களிலும் இலவசமாக பகிர்கிறோம்.
  3. நீங்கள் ஒரு எழுத்தாளராகவும், உங்கள் எழுத்து திறன்களை வெளிப்படுத்தவும் எண்ணியிருந்தீர்களானால், சிறந்ததொரு பயனுள்ள அனுபவத்தைப் பெறுவதற்கான சரியான வாய்ப்பு இதுதான்.
  4. உங்கள் வாழ்நாளில் நீங்கள் பெற்ற அறிவை பகிர்ந்து கொண்ட திருப்தியை பெற்று மேலும் உங்களின் ஆக்கப்பூர்வ கருத்துக்களில் வரவிருக்கும் இளைய தலைமுறையை உற்சாகப்படுத்துங்கள்.
  5. நீங்கள் எப்படி ஒரு பங்களிப்பாளராக ஆக முடியும்?
    earabictoenglihs.com/blog-ல் ஒரு வழக்கமான பங்களிப்பாளராக, உங்கள் கட்டுரை ஏற்றுக்கொள்ளபட மற்றும் வெளியிட நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகள்:

  6. குறிப்பாக வாசகர்களுக்கு நன்மை பயக்கும் தனிப்பட்ட உள்ளடக்கத்தை எழுதுங்கள்.
  7. எங்கள் இணைய பக்கத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட தலைப்புகள் / யோசனைகளை சமர்ப்பிக்காமல் தங்களது தனித்துவமான சிந்தனைகளை பதிவேற்றம் செய்யுங்கள்.
  8. முக்கியமாக, பார்வையாளர்கள் பயனடையும் பொருட்டு தரமான கட்டுரைகளை எழுதுங்கள்,இது உங்கள் மேல் உள்ள நன்மதிப்பை கூட்டும்.
  9. குறிப்பு இணைப்புகள், ஆதாரங்கள் ஆகியவை கட்டுரைகளுடன் பகிரப்பட வேண்டும்.
  10. இஸ்லாமியர்கள் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களை எழுதும் போது அதற்கான குர்ஆன் வசனங்களையும் அதன் சரியான வசன எண்களையும், ஹதீஸ் எண்களையும் குறிப்பிட்டிருந்தால் நல்லது.
  11. இஸ்லாம் வலியுறுத்தும் குடும்பவியல் சட்டம், பொருளாதாரம், வணிகம், கொடுக்கல் வாங்கல்,சம்பந்தமான ஆதாரப்பூர்வமான பகிர்வுகளை பதிவிடுதல் நல்லது.
  12. இஸ்லாமிய வரலாறு, அரசியல், நிலவியல், அறிவியல், குற்றவியல் சட்டங்கள் பற்றி கட்டுரைகள் எழுதுவோர் நடப்பில் உள்ள நிரூபிக்கப்பட்ட செய்திகளையும் இணைத்து எழுதுதல் நன்று.
  13. முஸ்லிம் அல்லாதோர் "நான் இஸ்லாமை ஏன் நேசிக்கிறேன்" என்ற தலைப்பில் கூட எழுதலாம் மேலும் நீங்கள் இஸ்லாம் / இஸ்லாமிய நண்பர்களுடனான நல்லனுபவங்களை எழுதலாம்.
  14. விதிகளுக்கு உட்படாத கட்டுரைகள் பிரசுரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது.

மேலே உள்ள எல்லா வழிகாட்டுதல்களையும் நீங்கள் படித்து புரிந்து கொண்டுவிட்டால், இங்கே நீங்கள் எப்படி கட்டுரையை சமர்ப்பிக்கலாம் என அறிந்துகொள்ளுங்கள்.

மின்னஞ்சலில்
பின்வருமாறு எழுதவும்:
Subject : Guest posting at eArabic

என தலைப்பிட்ட கட்டுரை பகுதியை இணைத்து write@earabictoenglish.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பித்தரவும்

earabictoenglish.com/blog இல் கட்டுரைகள் வெளியீடு தொடர்பான எந்த வினவல்களும் இருந்தால், எங்களுக்கு அதே மின்னஞ்சல் ஐடியின் மூலம் தெரியப்படுத்தவும்.

Contact us to know more about us and our Translation Service

Just fill in our inquiry form and our manager will get in touch with you shortly.